கிருமித் தொற்று காரணமாக யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளார்.

Apr 24, 2025 - 12:07
கிருமித் தொற்று காரணமாக யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். குடவத்தை - துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!