கொட்டி கொடுக்க வரும் செவ்வாய்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் காரணமாக ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற போகின்றனர்.

செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசியில் நுழையப் போகின்றார். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் காரணமாக ஒரு சில ராசிகள் அதன் மூலம் சிறப்பான பலன்களை பெற போகின்றனர்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பலன் உங்களுக்கு புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகளை கொடுக்கும். செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு பெரிய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் படிங்க | சூரியன் புதன் சேர்க்கை: பணமழை கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி எது?
துலாம் ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். வருமானம் மற்றும் லாப வீட்டில் கிரகம் நகர்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
புதிய வேலையை தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பணம் யோகம் உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
மேலும் படிங்க | சனி பெயர்ச்சி: அதிஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சி கொட்ட போகுது!
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் உங்களுக்கு செவ்வாய் அமர்கின்ற காரணத்தினால் நல்ல வெற்றி கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள். நம்பிக்கை மற்றும் உயர்வு உங்களுக்கு கிடைக்கும். பணம் யோகம் உங்களை தேடி வரும்.
வாழ்க்கையில் பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் உங்களுக்கு பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகளை உண்டாக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும்.