உளவு பார்த்த ரஷ்ய விமானங்களை தடுத்து நிறுத்திய பிரித்தானியா
நேட்டோவின் கிழக்கு எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில், ஸ்வீடனுடன் இணைந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நேட்டோ வான்வெளிக்கு அருகில் பறந்த ரஷ்ய உளவு விமானங்களை பிரித்தானியா தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலந்து நாட்டின் மால்பார்க் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு ராயல் ஏர் ஃபோர்ஸ் டைபூன் போர் விமானங்கள், பால்டிக் கடல் மீது பறந்த ரஷ்ய உளவு விமானமான Ilyushin Il-20M 'Coot-A'ஐ கடந்த செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தின.
மேலும் வியாழக்கிழமை, கலினின்கிராட் வான்வெளியை விட்டு புறப்பட்ட இன்னொரு அடையாளம் தெரியாத விமானத்தையும் இடைமறித்துள்ளது.
நேட்டோவின் கிழக்கு எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில், ஸ்வீடனுடன் இணைந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.