திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர்

திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் என பிரித்தானிய சமத்துவ அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

Apr 23, 2025 - 18:27
திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர்

திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் என பிரித்தானிய சமத்துவ அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கான சேவைகள் உயிரியல் பாலின அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான ஒரு முக்கிய தீர்ப்பை பிரித்தானிய உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், 2010 சமத்துவ சட்டத்தில் "பெண்" மற்றும் "பாலினம்" என்ற சொற்கள் "ஒரு உயிரியல் பெண் மற்றும் உயிரியல் பாலினத்தைக் குறிக்கின்றன" என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

UK Equalities Minister trans women, Bridget Phillipson toilet statement, Supreme Court ruling on gender, biological sex and public toilets, trans women male toilets UK, UK trans rights debate, single-sex spaces ruling UK, UK gender equality law, 2010 Equality Act interpretation, transgender rights in UK 2025

அதாவது, பாலின அங்கீகார சான்றிதழுடன் திருநங்கைகள் "விகிதாசார" என்று கருதப்பட்டால் ஒற்றை பாலின இடங்களிலிருந்து விலக்கப்படலாம். இது “பொருத்தமான காரணம்” அடிப்படையில் செயல்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

“மக்கள் பாதுகாப்பும், இடைமறியாத தனிப்பட்ட சேவைகளும் முக்கியம். டிரான்ஸ் விவகாரத்தில் குழப்பம் நீங்கியது நல்லது. தற்போது சேவை வழங்குபவர்கள் உறுதியாக செயல்படலாம்.” என பிலிப்சன் கூறியுள்ளார்.

மற்றொரு முன்னாள் நீதிபதி லார்டு சம்ஷன், இந்த தீர்ப்பு ஒரு கட்டாயமாக அல்ல, ஆனால் டிரான்ஸ் பெண்களை சில இடங்களில் விலக்குவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் என்றதுதான் அதன் உண்மை பொருள் என தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பின் எதிரொலியாக, நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் சில தவறான வாசகங்கள் கொண்ட பிரசார பலகைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!