ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Apr 20, 2025 - 13:28
ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!