74 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; இளைஞனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

Apr 24, 2025 - 07:48
Apr 24, 2025 - 07:49
74 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; இளைஞனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குற்றவாளியைகைது செய்து சட்டத்தை நிலைநாட்டு, கைது செய், போதை குற்றவாளியை கைது செய், போதை பொருளை ஒழிப்போம் போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கடந்த 20 ஆம் திகதி குறித்த தோட்டபகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு தனிமையில் இருந்த மூதாட்டியின் வீட்டில் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்து  மூதாட்டியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!