தமிழர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

39 வயதுடைய கதிரவௌி  பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Apr 28, 2025 - 10:49
தமிழர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

வாகரை கண்டலடி - புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

39 வயதுடைய கதிரவௌி  பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த 26ஆம் திகதி காலை கண்டலடியில் இறால் பிடிப்பதற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

சடலம் தற்போது மரண விசாரணைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை மரணமாக அல்லது கொலையா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!