ட்ரம்புக்கு முன்னராக பிரித்தானியாவுக்கு வரும் அரச தலைவர்
ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்துக்கு முன்னதாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா வர உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்துக்கு முன்னதாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா வர உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் போர், மற்றும் ட்ரம்ப் ஜனாதிபதியானது, ஆகிய விடயங்களைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு மறைமுக போட்டி உருவாகியுள்ளது.
இதனால், பல விடயங்களில் ஐரோப்பிய நாடுகள் ட்ரம்பை ஓரம் கட்ட முயற்சிக்கின்றன. இந்த நிலையில், ட்ரம்ப் செப்டம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர் பிரித்தானியா வருவதற்கு முன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா செல்ல முடிவு செய்துள்ளார். மேக்ரானின் அரசு முறைப்பயணம் குறித்த தகவல், பிரித்தானிய அரசு மற்றும் அரண்மனை அதிகாரிகளில் சிலருக்கு மட்டுமே தெரியுமாம்.
ட்ரம்ப் செப்டம்பரில் பிரித்தானியா வரும் நிலையில், மேக்ரான் மே மாத இறுதியில் பிரித்தானியா வர உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.