சன்னா மெரேயா பாடலால் ரத்து செய்யப்பட்ட திருமணம்

டெல்லியில் நடந்த திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்தார்.

Apr 28, 2025 - 10:27
சன்னா மெரேயா பாடலால் ரத்து செய்யப்பட்ட திருமணம்

டெல்லியில் நடந்த திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்தார்.

தனது கடந்த கால காதல் நினைவுகளைத் தூண்டும் வகையில், DJ 'சன்னா மெரேயா' என்ற உணர்ச்சிகரமான பொலிவுட் பாடலைப் இசைத்த பிறகு, மணமகன் மண்டபத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.  

ரசிகர்கள் மத்தியில் காதல் முறிவு' பாடலாகப் பிரபலமாக அறியப்படும் 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தின் பாடலை DJ இசைத்துள்ளார்.

இதன்போது, மணமகனுக்கு தனது கடந்த கால காதலியின் நினைவுகள் வந்ததால், அவர் தனது திருமணத்தை விட்டு வெளியேறினார். அவரது பக்கத்திலிருந்து வந்த விருந்தினர்களும் அப்போது அங்கிருந்து வெளியேறினர்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!