பழைய உடைந்த பூந்தொட்டி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை

பிரித்தானியாவில் உடைந்த பூந்தொட்டியொன்று 2 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

Apr 20, 2025 - 21:35
பழைய உடைந்த பூந்தொட்டி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை

பிரித்தானியாவில் உடைந்த பூந்தொட்டியொன்று 2 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஒரு பூங்காவில் மறந்துவிடப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு பழைய, உடைந்த பூந்தொட்டி ஒன்று 66,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனையானது.

இந்த பானை, ஏலத்தில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக பாரிய தொகைக்கு விற்கப்பட்டது.

இந்த 4 அடி உயரமுள்ள கல் வகை பானை 1964-ஆம் ஆண்டு பிரபல ஜேர்மன் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய கலைஞர் Hans Coper உருவாக்கியது.

அவர் இரண்டாம் உலகப் போர் போது ஜேர்மனியை விட்டு தப்பித்து இங்கிலாந்திற்கு வந்தவர். பின்பு லண்டனில் உள்ள Camberwell School of Arts-இல் கற்பித்தார். Coper உருவாக்கிய இந்த பானை அவரது மிக மதிப்புமிக்க கலைப்பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பானையின் உரிமையாளர் இறந்த பிறகு, அந்த வீட்டை பெற்ற பிள்ளைகள் பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து Chiswick Auctions நிறுவனத்தை அழைத்தனர்.

அவர்கள் மூலம் Hans Coper உருவாக்கிய மாஸ்டர் பீஸாக இது கண்டறியப்பட்டது. சிறிது முறிந்த நிலையில் இருந்தாலும், கீழ்பகுதியில் இருந்த முத்திரை அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!