ஹட்டனில் திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி
ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஸ்டெதன் தோட்ட பகுதியில், இன்று (23) முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது.

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஸ்டெதன் தோட்ட பகுதியில், இன்று (23) முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பிய பின்னர் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு பயணிகளுடன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் தெரிவித்தார்.
பிரதான வீதியில் பயணித்த வாகன சாரதிகளும், பிரதேச மக்களும் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.