பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Apr 21, 2025 - 18:12
Apr 21, 2025 - 21:12
பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில், இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்துக்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதிவிட்டுள்ளார்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!