துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

Apr 23, 2025 - 06:51
Apr 23, 2025 - 07:10
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் செவ்வாய்க்கிழமை இரவு (22) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள 'லக்சந்த செவன' அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே டொன் பிரியசாத் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த டொன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்றிரவு செய்தி வெளியாகி இருந்த போதிலும் பொலிஸார் அதனை பின்னர் மறுத்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!