மறு அறிவித்தல் வரை கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு
கண்டி நகரத்திற்கு வருகை தருவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.

கண்டி நகரத்திற்கு வருகை தருவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கெனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.