தபால்மூல  வாக்குச் சீட்டு தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

நீதிமன்றம் விதித்த தடைகள் காரணமாக 102 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தாமதமாகியிருந்தன.

Apr 20, 2025 - 13:17
தபால்மூல  வாக்குச் சீட்டு தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளும் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் விதித்த தடைகள் காரணமாக 102 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தாமதமாகியிருந்தன.

எவ்வாறெனினும், அந்த மன்றங்களுடன் தொடர்புடைய அனைத்து தபால்மூல வாக்குச் சீட்டுகளும் தற்போது அச்சிடப்பட்டு வருவதாக அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!