தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை : முக்கிய தகவல்

இலங்கையில் தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை : முக்கிய தகவல்

இலங்கையில் தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது தொடர்ந்து மூன்று நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இன்றைய (07) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 724,799 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது25,570 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 204,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம்  23,440 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் 187,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  21 கரட் தங்கப் பவுண் 179,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 197,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.