1 ஓட்டம் 2 விக்கெட்.. சமனிலைக்கு வந்த மேட்ச்.. இந்தியாவின் உலக சாதனை தள்ளிப்போனது!
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கொழும்பு மைதானத்தில் விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுக்க போட்டி டை ஆனது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் 7 பந்துகளில் 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா பொறுமையாக விளையாடி 75 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் 14, சரித் அசலங்கா 14, சமரவிக்கிரமா 8, ஜனித் லியாங்கே 20 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் நினைத்து நின்று விளையாடிய இளம் வீரர் துனித் வெல்லாலகே 65 பந்துகளில் 67 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹசரங்கா 35 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அக்சர் படேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். சிராஜ், குல்தீப், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் வந்தது. துணை கேப்டன் சுப்மன் கில் 35 ரன்கள் 16 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 47 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி 32 பந்தில் 24, வாஷிங்டன் சுந்தர் 4 பந்தில் 5, ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேஎல்.ராகுல் மற்றும் அக்ச்சர் படேல் இருவரும் 92 பந்தில் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆனால் கே.எல்.ராகுல் 43 பந்தில் 31, அக்சர் படேல் 57 பந்தில் 33 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். மேலும் குல்தீப் யாதவ் 2 ரன்னில் தொடர்ந்து வெளியேற இந்திய அணி மீண்டும் நெருக்கடியில் விழுந்தது.
இந்த நிலையில் சிவம் துபே அதிரடியாக இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 24 பந்தில் 25 ரன்கள் எடுக்க ஆட்டம் டிரா ஆனது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் ஆட்டம் இழந்து விட்டார். இதற்கு அடுத்து வந்த அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே ஆட்டம் இழக்க போட்டி டை ஆனது. கேப்டன் அசலங்கா சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தால் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் பெற்ற நூறாவது வெற்றியாக அமைந்திருக்கும். மேலும் 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக எந்த அணியும் 100 வெற்றி பெற்றதில்லை. இந்த அரிய உலக சாதனை தற்போது இந்திய அணிக்கு இந்த போட்டி டை ஆனதால் தள்ளிப் போயிருக்கிறது.