திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் – பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

கடந்த டிசம்பர் 27ஆம் திகதி மீனவர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், ஒரு இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது.

திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் – பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

திருகோணமலை கடற்பரப்பில் அண்மையில் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோன், நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை (SLAF) தளபதியிடம் இறுதி அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 27ஆம் திகதி மீனவர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், ஒரு இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதுடன், பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

ட்ரோன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சுமார் இரண்டு வாரங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தது என்பதும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.