வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. கண்டுபிடித்த மாணவர்கள்!

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த பையனின் தலைமுடியைப் பிடித்து சுவரின் மீது அவனை மோதி சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. கண்டுபிடித்த மாணவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் குல்தீப் யாதவ் வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்ததைக் கண்டு 8 வயது மாணவன் ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து விவாதித்து சிரித்துள்ளான்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த பையனின் தலைமுடியைப் பிடித்து சுவரின் மீது அவனை மோதி சரமாரியாகத் தாக்கியுள்ளார். காயமடைந்த சிறுவனின் தந்தை கொடுத்த புகாரை அடுத்து ஆசிரியரை விசாரணைக்காகக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவனின் தந்தை கூற்றுப்படி, வகுப்பறையில் குல்தீப் தனது மொபைல் போனில் ஒரு ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது மாணவர்கள் அவரது செயலைப் பற்றி விவாதித்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

மாணவர்களின் சிரிப்பால் ஆத்திரமடைந்த குல்தீப், என் மகனைத் கொடூரமாகத் தாக்கினார். அவர் என் மகனின் தலைமுடியைப் பிடித்து சுவரில் தலையை ஓங்கி அறைந்தார். மேலும் என் மகனை கைத்தடியால் தாக்கினார். என் மகனுக்கு காது உட்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.