14 பந்துக்கு 1 ஓட்டம்.. செம்ம ஏமாற்றம்.. உங்க இஷ்டத்துக்கு இங்க வந்து விளையாட முடியாது - ரோகித் சர்மா காட்டம்

இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் துனித் வெல்லாலகே மிகச் சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

14 பந்துக்கு 1 ஓட்டம்.. செம்ம ஏமாற்றம்.. உங்க இஷ்டத்துக்கு இங்க வந்து விளையாட முடியாது - ரோகித் சர்மா காட்டம்

இன்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டை ஆனது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பந்துவீசிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான முறையில் இலங்கை அணியை கட்டுப்படுத்தியது. பொறுமையாக விளையாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 75 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு விக்கெட் சரிவுகள் தொடர்ந்து வந்தது.

இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் துனித் வெல்லாலகே மிகச் சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அக்ச்சர் படேல் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அதிரடியாக 47 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து கேஎல்.ராகுல் 43 பந்தில் 31, அக்சர் படேல் 57 பந்தில் 33 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி நெருக்கடியில் மாட்டிக்கொண்டது.

இந்த நிலையில் உள்ளே வந்து அதிரடியாக விளையாடிய சிவம் துபே ஸ்கோரை லெவல் ஆக்கினார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து பத்தாவது விக்கெட்டுக்கு வந்த அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலையே ஆட்டம் இழக்க போட்டி டை ஆனது. இலங்கை தரப்பில் கேப்டன் அசலங்கா மற்றும் ஹசரங்கா இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டி டை ஆனது குறித்து பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “இந்த ஸ்கோர் எடுக்கக் கூடியதுதான். இங்கு நீங்கள் பேட்டிங் நன்றாக செய்ய வேண்டும். அதே சமயத்தில் நாங்கள் பேட்ச்களில் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால் எங்களுக்கு சீரான மொமண்டம் இல்லை. போட்டியில் எங்கள் கை மேலே இருந்தது. ஆனால் இரண்டு விக்கெட்டுகள் இழந்ததும் நாங்கள் நெருக்கடியில் சிக்கினோம். அந்த நேரத்தில் கேஎல்.ராகுல் மற்றும் அக்சர் மீட்டு வந்தார்கள்.

ஆனால் போட்டியின் முடிவு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. 14 பந்துக்கு ஒரு உடன் எடுக்க முடியாதது நிச்சயம் ஏமாற்றம்தான். இங்கு உங்கள் இஷ்டம் போல் வந்து பேட்டிங் செய்யவே முடியாது. சுழல் பந்துவீச்சு ஆரம்பித்ததும் பேட்டிங் மாறும் என்று எங்களுக்கு தெரியும். பந்து தேய்ந்த பிறகு இங்கு விளையாடுவது கடினம். இறுதியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு நியாயமான ஒரு முடிவு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.