7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கும்
இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி உரிய நடைமுறைகளின் கீழ் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்து பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்படி, வரும் 7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
”இறக்குமதி செய்த 5200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி கடந்த 30ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்றது. அதனை பகிர்ந்தளிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன.
இறக்குமதி செய்யப்பட்டஅரிசியை நான்கு கட்டங்களாக விநியோகித்துள்ளோம். மேலும் 5200 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் அனுமதியையும் நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளோம்.
7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இதற்கு அப்பால் மேலும் 28ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்.” என்றார்.