மஹரகமவில் எழும்பு மச்சை சிகிச்சைகளுக்காக புதிய வைத்தியசாலை
எலும்பு மச்சை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு மஹரகம அபெக்ஷய வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் பங்களிப்பு மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலாவின் நிதி அனுசரணையுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான எலும்பு மச்சை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு மஹரகம அபெக்ஷய வைத்தியசாலையில் இன்று (02) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, விமானப்படைத் தலைவர் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் பங்களிப்பில் மஹரகம அபேக்ஷ வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்கால பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படையின் பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படைத் தளபதி தனது உடன்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.