விரைவில் சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியல் - ப்ரோமோ இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் சுவாதி கோண்டே ஹீரோயின் ஆகவும் நியாஸ்.ஜெ ஹீரோவாகவும் நடித்து உள்ளனர். 

விரைவில் சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியல் - ப்ரோமோ இதோ!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்கள் என்றாலே அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். அந்த வகையில், தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் சுவாதி கோண்டே ஹீரோயின் ஆகவும் நியாஸ்.ஜெ ஹீரோவாகவும் நடித்து உள்ளனர். 

இது மட்டும் இல்லாமல் ப்ரீத்தி சஞ்சீவ் அம்மாவாகவும், நடிகர் பிரபாகரன் அப்பாவாகவும் நடித்துள்ளனர். கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ள தேனி முருகன், இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி ஆவார். இவர் சீரியலில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஹீரோவின் அக்காவாக கிருத்திகாவும், ஹீரோயின் சுவாதியின் தங்கையாக நடிகை காவியா பெல்லு நடித்துள்ளார்.

தலைநகரம், உடன்பிறப்பே போன்ற படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாகவும் பணியாற்றியவர் பட்டுக்கோட்டை ஆர்.குமரன். AVM நிறுவனத்தின் 175வது படமான “முதல் இடம்”படத்தின் இயக்குநரான இவர், மூன்று முடிச்சு தொடரின் கதாசிரியர் ஆவார். 

இவரும், ராட்சசி திரைப்படம் மற்றும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியல்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் பாரதி தம்பியும் இணைந்து மூன்று முடிச்சு சீரியலின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதுகின்றனர்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘தென்னவன்’ மற்றும், “ஜாம்பவான்” ”கல்கண்டு” போன்ற படங்களை இயக்கிய நந்தகுமார் என்கிற நந்தன் C முத்தையா இந்த தொடரை இயக்குகிறார். 

மேலும், சதுரங்க வேட்டை, Road போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த சீரியல், அ.அன்பு ராஜா மற்றும் அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது.

தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.