25 மணிநேரமாக மாறும் ஒரு நாள் - நிலவுக்கும் பூமிக்கும் இடையில் நிகழும் மாற்றம்

ஒரு வருடத்துக்கு 3.8 சென்ரிமீட்டர் அளவு படிப்படியாக நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

25 மணிநேரமாக மாறும் ஒரு நாள் - நிலவுக்கும் பூமிக்கும் இடையில் நிகழும் மாற்றம்

எதிர்காலத்தில் ஒரு நாளினுடைய அளவு 25 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் Wisconsin madison பல்கலைக்கழகம் பூமிக்கும் நிலவுக்குமான வரலாற்று தொடர்பையும் அது எவ்வாறு பல மில்லியன் வருடங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது எனவும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கமைய நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாகவும் இதனால் ஒரு நாளினுடைய அளவு 24 மணித்தியாலங்களில் இருந்து 25 மணித்தியாலங்களாக மாறும் எனவும் ஒரு நாளினுடைய இரவு அல்லது பகலின் அளவு மாறும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை ஒரு வருடத்துக்கு 3.8 சென்ரிமீட்டர் அளவு படிப்படியாக நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் இருக்க கூடிய இரு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு தொடர்பால இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

பூமியின் புவியியல் கடந்த காலத்தை பற்றிய நுண்ணறிவுகளை பெற ஆராய்ச்சியாளர்கள் சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை அமைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.

நிலவின் தாக்கத்தால் பூமியின் சுழற்சி இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாக கொண்டு இந்த ஆய்வை செய்ததாக கூறியுள்ளனர்.

இதனூடாக ஏறக்குறைய 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவுடன் பூமியின் உறவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நிலவு, பூமியிலிருந்து விலகி செல்லும் தற்போதைய விகிதம் இவ்வாறே தொடர்ந்தால், பூமியில் ஒரு நாளின் நீளம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளில் 25 மணிநேரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாம நிலவு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, ​​இந்த செயல்முறை படிப்படியாக நடைபெறும் என்றும் ஆனால் நிலவு இரவு வானில் இருந்து விரைவில் மறைந்துவிடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.