நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு ; மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.