ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து செல்லுபடியாகும்; உயர் நீதிமன்றம் அறிவிப்பு

கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்ததை எதிர்த்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து செல்லுபடியாகும்; உயர் நீதிமன்றம் அறிவிப்பு

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றமையே அதற்கு காரணம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்ததை எதிர்த்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.