220 ரன்தான் எங்க  திட்டம்.. இந்த 2 பேர்தான் வெற்றிக்கு காரணம் – வெல்லாலகே அதிரடி

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது.

220 ரன்தான் எங்க  திட்டம்.. இந்த 2 பேர்தான் வெற்றிக்கு காரணம் – வெல்லாலகே அதிரடி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் சற்று சொதப்பலான ஆட்டத்தால் போட்டி இரண்டு அணிகளுக்கு இடையேயும் பாரபட்சம் இன்றி சமனில் முடிவடைந்துள்ளது.

டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று கொழும்பு பிரமதேச மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் நிஷான்கா 56 ரன்கள் குவித்த நிலையில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் குறைந்த ரன்களில் வெளியேற இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடிய வெல்லால்கே 65 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 

இதில் ஏழு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். இவரது அதிரடியின் மூலமே இலங்கை சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது இதனால் இலங்கை 230 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா 58 ரன்கள் குவிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடினர்.

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் இலங்கை அணி அபாரமாக பந்து வீசியதால் 230 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அக்சார் 33 ரன்களும் கேஎல் ராகுல் 31 ரன்களும் குவித்தனர். இந்த நிலையில் பந்து வீச்சிம் சிறப்பாக செயல்பட்டு இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற இலங்கை அணியின் வெல்லால்கே வெற்றி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் களத்திற்குள் திட்டத்தோடுதான் பேட்டிங் செய்ய வந்தேன். அப்போது ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு நன்றாக உதவியது. நான் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்குள் கொண்டுவர முயற்சித்தேன். நானும் ஜனித்தும் பார்ட்னர்ஷிப் கொண்டு வர விரும்பினோம். அதற்குப் பிறகுதான் ஹசரங்காவுடன் நல்ல பாட்னர்ஷிப் அமைந்தது. ஆடுகளம் அப்போது மெதுவாக இருந்ததால் 220 ரன்கள் குவிக்க நாங்கள் திட்டமிட்டோம்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் முதல் இன்னிங்ஸை விட நன்கு உதவியது. எங்களது கேப்டன் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் ஆட்டத்தை மாற்றினர். இன்றைய போட்டியில் நாங்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்” என்று கூறியிருக்கிறார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.