திரும்ப வருகிறார் தினேஷ் கார்த்திக்.. எந்த தொடரில் விளையாட போகிறார்?

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தவர் தினேஷ் கார்த்திக். 

திரும்ப வருகிறார் தினேஷ் கார்த்திக்.. எந்த தொடரில் விளையாட போகிறார்?

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தவர் தினேஷ் கார்த்திக். 

39 வயதான தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 180 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய தலைமையில் பல்வேறு காலங்களில் பல்வேறு நிலையில் நிரூபித்திருக்கிறார்.

தொடக்க வீரராகவும் நடுவரிசை வீரராகவும் பினிஷராகவும் தினேஷ் கார்த்திக் மூன்று பரிமாணம் உடைய வீரராக டி20 கிரிக்கெட்டில் திகழ்ந்து இருக்கிறார். 

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 401 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் மட்டும் தினேஷ் கார்த்திக் கே கே ஆர்,ஆர் சி பி, மும்பை இந்தியன்ஸ் என ஆறு அணிகளில் விளையாடிருக்கிறார். 

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவிய நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ 20 தொடரில் சிறப்பு தூதராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தினேஷ் கார்த்திக் இன்னும் உடல் தகுதியுடன் இருப்பதால் அவரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எஸ் ஏ 20 தொடரின் அணிகள் அவரை அணுகியது. 

இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட தினேஷ் கார்த்திக் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதன் மூலம் ஓய்வு முடிவில் இருந்து தினேஷ் கார்த்திக் திரும்ப வந்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்காவில் விளையாடிய பல நல்ல நினைவுகள் எனக்கு இருக்கிறது. 

எனக்கான வாய்ப்பு வரும் போது அதை வேண்டாம் என்று சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் இது போன்ற சவாலான தொடரில் விளையாடுவது மிகவும் ஸ்பெஷலான விஷயம்.

இதனால் நான் எஸ் ஏ 20 தொடரில் விளையாட முடிவு எடுத்திருக்கின்றேன். ராயல்ஸ் அணியில் வெற்றிக்காக பாடுபடுவேன். ஐபிஎல் தொடரில் இதுவரை நான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவதில்லை. 

தற்போது அந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகுதான் வெளிநாட்டு தொடர்களில் விளையாட முடியும் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதன்படி ராயுடு கடந்த ஆண்டு சிபிஎல் தொடரில் விளையாடினார். அதன் பிறகு உத்தப்பா, யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல் அணிக்காகவும் சுரேஷ் ரெய்னா டெக்கான்ஸ் அணிக்காகவும் அபுதாபியில் விளையாடியிருக்கிறார்.

இந்த வரிசையில் தற்போது தினேஷ் கார்த்திக் சேர்ந்திருக்கிறார்.தினேஷ் கார்த்திக்கின் அனுபவமும் அவருடைய திறமையும் ராயல்ஸ் அணியின் பலத்தை மேலும் அதிகரித்திருப்பதாக ராயல்ஸ் அணியின் இயக்குனர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.