டேவிட் வார்னரின் வாழ்நாள் தடை நீக்கம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் முடிவு!
டேவிட் வார்னருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒரு ஆண்டும், கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் தடைவிதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து மீது மணல் தாள் வைத்துத் தேய்த்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் டேவிட் வார்னருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒரு ஆண்டும், கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் தடைவிதிக்கப்பட்டது.
மேலும், அவருடன் சேர்த்து இந்தச் சம்பவத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோருக்கும் ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக டேவிட் வார்ன ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முன் ஆஜராகி இதுபற்றி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக டேவிட் வார்னரின் வருத்தத்தை ஏற்றுக் கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு விதிக்கப்பட்ட கேப்டனாவதற்கான வாழ்நாள் தடை நீக்குவதாக அறிவித்துள்ளது.