Skip to content

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்று (23) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,893 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம் 28,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 227,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 26,040 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 208,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 217,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அங்கு 21 கரட் தங்கப் பவுண் 200,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.


© 2024 Seithi.lk | செய்தி. All Rights Reserved.

Web Design and Development by GCloud