கமலுக்கு பதிலாக நயன்தாரா - பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்

கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் தொகுத்து வழங்கப்போவது யார்? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி வருகின்றது.

கமலுக்கு பதிலாக நயன்தாரா - பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் தொகுத்து வழங்கப்போவது யார்? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி வருகின்றது.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக நடிகை நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த செய்தி வெறும் வதந்தி தானா அல்லது அவர் பிக் பாஸ் தொகுத்து வழங்க நயன்தாரா வருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.