நடிகர்கள் பற்றி கேட்டதுக்கு கடுப்பாகிய பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா சமீபத்தில் ஷாஹித் கபூருடன் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஒரு காலத்தில் டோலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர். தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்றார்.
பூஜாவும் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விட்டுவிட்டார். இந்நிலையில் சில காலங்களாக சினிமாவில் இருந்து விலக்கியிருந்தார். தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு படம் கூட நடிக்காமல் முழுமையாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தேவா படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.
இதில் ஷாஹித் மற்றும் பூஜாவின் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை பூஜா சமீபத்தில் ஷாஹித் கபூருடன் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.
இந்த நேர்காணலில்தான் தொகுப்பாளர் கேட்ட கேள்வியில் கோபப்பட்டுள்ளார். அவர் பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், ஹிருத்திக், ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் படங்களில் நடிப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறீர்களா? அந்த படங்களுக்கு நீங்கள் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை பூஜா ஹெக்டே “அந்தப் படங்களுக்கு என்னைத் தேர்வு செய்ததற்கு இயக்குநர்கள் சில காரணங்களிருக்கும், அதனால் அந்த வாய்ப்பு வரும்போது அந்த கதாபாத்திரத்திற்கு உரிய விளக்கம் எனக்குக் கிடைத்தால் அதில் நடிப்பேன். அது எனக்கு அதிர்ஷ்டம்தான், சோகமான விஷயம் இல்லை என்று கூறினார்.
மேலும் தொகுப்பாளர் திரைப்படங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள், முன்னணி நடிகர்களை வைத்து மட்டும்தான் படம் பண்றீங்களா? என்று கேட்டபோது நடிகை பூஜா ஹெக்டே பொறுமை இழந்துள்ளார்.
மேலும் தொகுப்பாளரிடம் உங்கள் பிரச்சனை என்ன? உங்களுக்கு என்ன பதில் வேண்டும்? என ஆத்திரமடைந்துள்ளார்.இந்நிலையில் பிரச்சனையை தடுக்கும் பட்சத்தில் நடிகர் ஷாகித் கபூர் அதைத் திசை திருப்பியுள்ளார்.