ப்ரமோஷனுக்கு வர 3 இலட்சம் ரூபாய் கேட்ட நடிகை !
ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை அபர்ணதி இதுவரை தமிழில் மூன்று படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை அபர்ணதி இதுவரை தமிழில் மூன்று படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் நாற்கரப்போர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக இவரை அழைத்துள்ளனர்.
ஆனால் இவரோ நான் வந்து மேடையில் அமரும்போது எனக்கு சமமானவர்கள் தான் அங்கு இருக்க வேண்டும், 3 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் வருவேன் என கண்டிஷன்களை அடுக்கியுள்ளார்.
இதை கேட்டு படத்தின் தயாரிப்பாளர் கடுப்பாகி உள்ளார். இந்த விஷயத்தை மேடையில் கூறிய சுரேஷ் காமாட்சி இதுபோன்ற நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு தேவையே இல்லை என கூறியுள்ளார்.