நடிப்பு வாழ்க்கை நாசமாக காரணம் - முதல் முறையாக மனம் திறந்த பிரசாந்த்!
இந்நிலையில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கே டஃப் கொடுத்து வந்தவர் தான் பிரபல நடிகர் பிரசாந்த். ஆனால் தற்போது இவர் விஜய் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த்,
“என் படத்துக்கான கதைய நான் தான் கேட்பேன். சில சமயங்களில் கதை அல்லது கேரக்டரில் எனக்கு உடன்பாடு இல்லை என்றால், அதை அப்பாவிடம் கூறுவேன்.
அவரும் இயக்குனரிடம் பிரசாந்துக்கு கதை ஓகே தான். ஆனால் இது சரிப்பட்டு வருமானு எனக்கு தோன்றவில்லை என்று பழியை அவர் மீது போட்டு கொள்வார்.
அதனாலேயே என் கெரியரை கெடுத்தது என் அப்பா தான் சொல்லுவாங்க. ஆனால் யார் என்ன சொன்னாலும் என் அப்பா எப்பவும் என்னை பற்றி தான் நினைச்சுட்டு இருப்பார்” என உருக்கமாக பேசியுள்ளார்.