பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை - வெளியான திடுக்கிடும் தகவல்!

இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை - வெளியான திடுக்கிடும் தகவல்!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், அந்த வளாகத்திற்குள்ளேயே திங்கள்கிழமை (23) இரவு பாலியல் வன்முறைக்கு இலக்கானதாக புகார் அளித்தார்.

இரவு உணவருந்திய பிறகு மாணவர் ஒருவருடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார்

இதற்கு பிறகு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிப்பதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.