வெளியேறத் தயாராக இருக்கிறேன் - மஹிந்த ராஜபக்ஷ
கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் காலி செய்யத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரச இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மிகவும் மோசமான காலங்களில் 10 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய ஜனாதிபதியாக, முன்னாள் அரச தலைவராகவும் எனது பாதுகாப்பிற்காகவும் அரசியலமைப்பு ரீதியாக எனக்கு இந்த வீடு வழங்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் காலி செய்யத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொது மேடைகளில் சென்று தனக்காக விளம்பரம் பெற முயற்சிப்பதை விட, எழுத்துப்பூர்வ அதிகாரப்பூர்வ கோரிக்கையை அனுப்புமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.