முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று (23) முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். 

இது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். 

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.