சீரற்ற காலநிலை - நாடு முழுவதும் 159,547 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 159,547 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 159,547 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் மாத்திரம் 82,000க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், 2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.