அஸ்வெசும 2 ஆம் கட்ட கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அஸ்வெசும 2 ஆம் கட்ட கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கணக்கெடுப்பு இன்று  (21) ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
 
இதன்படி இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
மேலும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 34 லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், அதில் 18 லட்சம் பேர் மட்டுமே அதற்கு தகுதி பெற்றன என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.